திமுக சின்னத்தில் போட்டியிடும் 6 கட்சிகள்
சென்னை:
திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் திமுக தவிர மொத்தம் 6கட்சிகள் போட்டியிட உள்ளன.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகள் பல்வேறு சின்னத்தில் கீழ்போட்டியிடவுள்ளன. 6 கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
புதிய நீதிக்கட்சி, மக்கள் தமிழ் தேசம், புதிய தமிழகம், எம்.ஜி.ஆர். அதிமுக,எம்.ஜி.ஆர்.கழகம், தொண்டர் காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் கட்சி, உழவர்உழைப்பாளர் கட்சி, தமிழர் பூமி ஆகிய கட்சிகள் சுயேச்சை சின்னத்தில்போட்டியிடவுள்ளன.
இவற்றில், புதிய நீதிக் கட்சி டெலிவிஷன் சின்னத்தை வழங்குமாறு கோரியுள்ளது.எம்.ஜி.ஆர். கழகத்தின் ஆர்.எம்.வீரப்பனுக்கு டெலிவிஷன் சின்னம்வழங்கப்பட்டுள்ளது. திருநிாவுக்கரசுவின் எம்.ஜி.ஆர். அதிமுக தங்களதுவேட்பாளர்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
தொண்டர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் குமரி அனந்தன் மெழுகுவர்த்தி சின்னம்கோரியுள்ளார்.
இவை தவிர பிற 6 கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயேபோட்டியிடவுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முஸ்லீம் ஐக்கிய ஜமாத், தமிழ்மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம்,முத்தரையர் சங்கம், தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவையே அவை.
இக்கட்சிகளின் சார்பில் மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.












Click it and Unblock the Notifications