உங்கள் ஓட்டு டெலிவிஷனுக்கே!
சென்னை:
முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர் கழக தலைவருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு, அவர்போட்டியிடும் ஆலந்தூர் தொகுதியில் டி.வி. சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆர்.எம்.வீரப்பன் ஆலந்தூர் தொகுதியில்போட்டியிடுகிறார். அவருக்கு டெலிவிஷன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில்அவர் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், தேர்தல்கமிஷன் விதி அதற்கு இடைஞ்சலாக இருந்ததால் தனி சின்னத்தில் அவர்போட்டியிடுகிறார்.
தனது சின்னத்தை அறிமுகப்படுத்தி ஆலந்தூர் தொகுதியில் நடந்த கூட்டத்தில்ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:
அண்ணாவால் தி.மு.கவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டபின் முதல் முறையாக எம்.ஜி.ஆர். அப்போது பரங்கிமலை தொகுதி என்றுஅழைக்கப்பட்ட இத்தொகுதியில் போட்டியிட்டார்.
உதயசூரியன் சின்னத்தில் அப்போது எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். அவரதுவெற்றிக்காக சூறாவளியாக சுழன்று நான் பணி செய்தேன்.
புரட்சித்தலைவர் போட்டியிட்டு வென்ற சின்னத்தில் போட்டியிடவே விரும்பினேன்ஆனால் முடியவில்லை. இனிமேல் உங்களது சின்னம் டெலிவிஷன்தான். இதுகலைஞரின் சின்னம். உங்களது சின்னம் டெலிவிஷனே.
காலை முதல் படுக்கைக்குப் போவது வரை உங்களை விட்டுப் பிரியாததுடெலிவிஷன். அதுபோல, வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வரும் வரை நீங்கள்மறக்கக் கூடாத சின்னம் டெலிவிஷன்தான் என்றார் ஆர்.எம்.வீரப்பன்.
தமிழகத்தின் சக்தி வாய்ந்த அரசியல் சின்னங்களில் ஒன்றான இரட்டை இலைசின்னத்தில் போட்டியிட்டு வென்ற ஆர்.எம்.வீரப்பன், இப்போது சுயேச்சைவேட்பாளர்களின் சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications