ஹைதராபாத்தில் 1000 பேரை வேலைக்கு சேர்க்கிறது விப்ரோ
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் விப்ரோ தன்னுடைய 2 சாப்ட்வேர் யூனிட்டுகளை நிறுவ உள்ளது.
விப்ரோ சேர்மன் அஸிம் ப்ரேம்ஜி நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில்,
விப்ரோவின் சாப்ட்வேர் பிரிவுகள் ஹைதராபாத்தில் ஏற்கனவே இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இனிவியாபாரரீதியான நடவடிக்கைகளில் எங்கள் முழுக் கவனமும் இருக்கும்.
இங்கு 1000 கம்ப்யூட்டர் வல்லுநர்களை வேலையில் அமர்த்த இருக்கிறோம்.
அமெரிக்கத் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட தேக்க நிலை எங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.எங்களிடம் உள்ள மொத்த திட்டங்களில் 60 சதவீதம் அமெரிக்க ப்ராஜக்ட்கள் தான்.
மேலும் சாப்ட்வேர் பப்பிள் உடைந்துவிட்டதும் கூட நல்லது தான். இனிமேல் தான் இந்தத் துறையில் நிலையான,திடமான வளர்ச்சி இருக்கும். அதே போல சாப்ட்வேர் நிபுணர்களுக்கும் வேலை உறுதியும் இருக்கும்.
இந்த ஆண்டுக்கு நாஸ்காம் நிர்ணயித்துள்ள இலக்கான 40-45 சதவீதத்தை விட அதிக அளவில் எங்களது வளர்ச்சிஇருக்கும். விப்ரோ எப்போதும் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகவே விளங்கும்.
ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 100 சதவித வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, அங்குஎங்களது முதலீட்டை மேலும் அதிகரிக்கவிருக்கிறோம். ஆசிய-பசிபிக் மார்க்கெட்டிலும் எங்கள் கவனம் இனிதிசை திரும்பும். அமெரிக்காதான் இப்போது இந்தியாவின் பிரதான சாப்ட்வேர் ஏற்றுமதித் தளமாகவிளங்குகின்றது.
மனிதவளமும் இப்போது மிக முக்கியமானதாக இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் அபரிமிதமான இந்தமக்கள்தொகையே நமது பலமாகும். அதை மேலும் பலமானதாக மாற்றுவது நம்முடைய கடமை. அதன்முதற்கட்டமாக, பள்ளிக்குச் செல்லாமலிருக்கும் பல லட்சக்கணக்கான குழந்தைகளை ஆரம்பப் பள்ளிக்கு அனுப்பவேண்டும்.
உலகத் தரத்திற்கு இணையான பல கல்வி நிறுவனங்களை நாம் பெற்றிருக்கிறோம். தொழில்துறை மற்றும்மேலாண்மையைப் பற்றியும் மக்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளும் வகையில், அவற்றின் தரத்தையும் உயர்த்தவேண்டும்.
உலகின் சாப்ட்வேர் சந்தையில் பாதி அமெரிக்காவிலும், மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பாவிலும், 20 சதவீதம் ஜப்பான்போன்ற ஆசிய-பசிபிக் நாடுகளிலும் உள்ளது.
கடந்த ஆண்டு எங்களது மொத்த சாப்ட்வேரில் 60 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தஆண்டு அது குறையும். ஆனால், ஐரோப்பாவுக்கு எங்கள் ஏற்றுமதி இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரிக்கும்.ஜப்பானுக்கான ஏற்றுமதி 10 சதவீதகம் அதிகரிக்கும் என்றார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications