ஈரோட்டில் கருணாநிதி- ஜெயலலிதா
ஈரோடு:
ஈரோட்டில் இன்று இரு ""அரசியல் துருவங்கள் சந்திக்கின்றன.
தமிழகத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் இந் நேரத்தில் ஒரே நகரில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இன்று ஈரோடு வருகின்றனர்.அங்கேயே தங்குகின்றனர். இதையடுத்து ஈரோட்டில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று அதிமுக அணியின் தலைவி ஜெயலலிதா தீவிரப் பிரச்சாரம் செய்கிறார். இந்தமாவட்டத்தில் சூலூர், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், கிணத்துக்கடவு, மேட்டுபாளையம் வரை ஜெயலலிதா பிரச்சாரம்மேற்கொள்கிறார்.
பின்னர் மேட்டுப்பாளையத்திலிருந்து கோபி, சித்தோடு வழியாக ஈரோடு சென்றடைகிறார் ஜெயலலிதா. வெள்ளிக்கிழமை இரவுஈரோட்டில் அவர் தங்குகிறார்.
அதேசமயம், திமுக அணித் தலைவர் கருணாநிதி, சேலத்தில் தற்போது பிரச்சாராத்தை முடித்துக் கொண்டு திண்டல், காங்கேயம்,வெள்ளகோயில், முத்தூர், கரூர் வழியாக இரவு ஈரோடு வந்தடைகிறார். வெள்ளியிரவில் அவரும் ஈரோட்டில் தங்குகிறார்.
ஒரே நகரில் இரு பெரும் அரசியல் தலைவர்கள் தங்குவதால், போலீசார் அச்சத்தில் உறைந்துள்ளனர். தொண்டர்களுக்குள் எதுவும்மோதல் வந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் செயலாற்றி வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு நகரில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications