ஜெ. மனுவை தள்ளுபடி செய்த அதிகாரி தேர்தல் கமிஷன் முன் ஆஜர்
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்களை நிராகரித்த கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி மதிவாணன்,வெள்ளிக்கிழமை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி முன் ஆஜராகி மனுவை நிராகரித்ததற்கானகாரணத்தை விளக்கினார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகியநான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் நான்கு தொகுதிகளிலும் அவரதுமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஊழல் புகார் காரணமாக 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றது மற்றும் சட்டவிதிக்குப் புறம்பாக நான்குதொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது ஆகியவை மனு தள்ளுபடிக்குக் காரணமாக கூறப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி மதிவாணன், திடீர் என வெள்ளிக்கிழமை சென்னைவந்தார். தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கியைச் சந்தித்த அவர் ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்ததற்கானகாரணத்தை விளக்கினார்.
இந்த விளக்கத்தை தேர்தல் கமிஷனுக்கு சாரங்கி அனுப்பிவைப்பார் எனத் தெரிகிறது. சாரங்கி அழைப்பின்பேரிலேயே மதிவாணன் சென்னை வந்தார் எனத் தெரிகிறது.
இதேபோல, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை தொகுதி தேர்தல் அதிகாரிகளும் சாரங்கியிடம் விளக்கம்அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களது விளக்கம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.


Click it and Unblock the Notifications
