ஆயுதங்கள் குவிக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
1992ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை உலகில் மிக அதிகமாக ஆயுதங்கள் வாங்கிக் குவித்த முதல் 10நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியாவின் பெயர் இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆயுதம் வாங்குவதற்காக 4.4 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது.இது தவிர அமெரிக்காவிடமிருந்து 650 மில்லியன் டாலர்கள் செலவில் எப்-16 விமானத்தையும்வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நேஷன் என்ற நாளிதழ் தெரிவிக்கையில், பாகிஸ்தான் அதிக அளவில் ஆயுதம் வாங்கும் நாடுகளில்10வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 4.4.பில்லியன் டாலருக்கு ஆயுதம் வாங்கியுள்ளது. ஈரான்4.7பில்லியன் டாலருக்கு ஆயுதம் வாங்கியுள்ளது. சீனா 5.9 பில்லியன் டாலருக்கு ஆயுதம் வாங்கியுள்ளது.
இந்தியா அதிக ஆயுதம் வாங்கிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்திய நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்பு செலவுகளுக்காக ரூ 63,000 கோடிஒதுக்கப்பட்டிருந்தாலும் அதிக அளவிலான பணம் ராணுவ வீரர்களின் சம்பளத்திற்கும், பராமரிப்புசெலவுகளுக்குமே சரியாகி விடுகிறது.
ஆயுதம் வாங்குவதற்காக அதிக அளவில் செலவு செய்யும் நாடுகளில் சவூதி அரேபியா முதலிடம்வகிக்கிறது. சவூதி அரேபியா ஆயுதம் வாங்க 66.1 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது.
பட்டியலில் இரண்டாவது இடத்தை தைவான் பிடித்துள்ளது. இந்நாடு ஆயுதம் வாங்க 20.6 பில்லியன் டாலர்செலவிட்டுள்ளது.
ஆயுதம் வாங்குவதற்காக எகிப்து 9.7 பில்லியன் டாலரும், தென் கொரியா 8.0 பில்லியன் டாலரும்,ஐக்கிய அரபு நாடுகள் 7.8 பில்லியன் டாலரும், குவைத் 7.6 பில்லயன் டாலரும், இஸ்ரேல் 7.2 பில்லியியன்டாலரும் செலவிட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications