இந்தியாவிற்கு 3 ராக்கெட் என்ஜின்கள்: ரஷ்யா தருகிறது
மாஸ்கோ:
இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து, மேலும் 3 கிரையோஜெனிக் எஞ்சின்களையும், 5பூஸ்டர் ராக்கெட் செலுத்து கருவிகளையும் இந்தியாவுக்குத் தர ரஷ்யா முன் வந்துள்ளது.
கடந்த 18ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-1 செயற்கைக்கோள் குறிப்பிட்டஉயரத்தை எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட ரஷ்யாவின் கிரையோஜனிக் எஞ்ஜின் மூலம் போதிய திறன்கிடைக்கவில்லை. இதனால் செயற்கைக்கோளை போதிய உயரத்தில் ராக்கெட் செலுத்தவில்லை. இதனால், 36,000கிலோமீட்டர் உயரத்தில் பூமியை வலம் வரவேண்டிய ஜிசாட்-1 செயற்கைக்கோள் இப்போது 35,000 கிலோமீட்டர்உயரத்திலேயே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
விண்ணில் நம் நாட்டுக்கு நேராக 24 மணி நேரமும் நிறுத்தப்பட வேண்டிய செயற்கைக்கோள் 23 மணி 2நிமிடங்கள் மட்டுமே நின்று கொண்டிருக்கிறது. மீதி 58 நிமிடங்கள் அது பாதை மாறிவிடுகிறது.
கிரையோஜனிக் ஒரு நல்ல எஞ்சின்தான். இருந்தாலும் இதில் உள்ள இரண்டு ப்ரொப்பல்லன்ட் டாங்குகளில் ஒன்றுமிகவும் பழையதாகும். இதனால் ஏராளமான எரிபொருள் செலவாகிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மேலும் 3 கிரையோஜெனிக் எஞ்சின்களையும், 5 பூஸ்டர் ராக்கெட் செலுத்து கருவிகளையும் ரஷ்யாஇந்தியாவுக்குத் தருவதாகக் கூறியிருக்கிறது.
இதன்மூலம் மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான வாய்ப்புகளும் இந்தியாவுக்குஅதிகமாகும்.
அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, ஏற்கனவே நான்கு கிரையோஜெனிக் எஞ்சின்களை இந்தியாவுக்குத்தந்துள்ளது.
யு.என்.ஐ.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications