நான் அடுத்த முதல்வரா? தம்பித்துரை மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், நான்தான் அடுத்த முதல்வர் என்று கூறி பிரசாரத்தில்ஈடுபடவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் தம்பித்துரை விளக்கம் அளித்துள்ளார்.

அ.திமுக சார்பில் பர்கூர் சட்டசபைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பித்துரை போட்டியிடுகிறார்.ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியாகி அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைஉருவாகியிருப்பதால், பர்கூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான்தான் அடுத்த முதல்வர் என்றுதம்பித்துரை கூறி வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்திக்கு தம்பித்துரை மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் இதுதொடர்பாக வெளியிட்டஅறிக்கையில், பர்கூர் தொகுதியில் நான்தான் முதல்வர் என்று கூறி நான் பிரசாரத்தில் ஈடுபடுவதாக தி.மு.கதலைவர் கருணாநிதி கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா மட்டுமே அனைத்துத் தரப்பு மக்களாலும் முதல்வர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரேதலைவர். இந்த உண்மையை நாடு அறியும். இதை கருணாநிதி என்ற தீய சக்தியால் தடுத்து விட முடியாது.

இப்போது தமிழகத்தில் வீசுவது புரட்சித்தலைவி அலையே. கருணாநிதியும், தி.மு.கவும் இந்த தேர்தலில் வீழ்வதுஉறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

இந்த நிலையில் அ.தி.மு..க தொண்டர்களிடையே குழப்பம் விளைவிக்கும் முயற்சியில் கருணாநிதிஇறங்கியுள்ளார். அ.தி.மு.கவுக்கு வாக்களியுங்கள், தி.மு.கவை வீழ்த்துங்கள் என்று கூறித்தான் அ.திமு.க.வேட்பாளர்கள் அனைவரும் வாக்கு கேட்கிறோம். பர்கூர் எம்.எல்.ஏவாக என்னைத் தேர்ந்தெடுங்கள் என்று கூடநான் பிரசாரம் செய்யவில்லை.

உண்மை இப்படி இருக்க நான்தான் அடுத்த முதல்வர் என்று வாக்கு கேட்பதாக கருணாநிதி பிதற்றியும்,புலம்பியும் வருகிறார். எந்த இடத்திலும் நான்தான் முதல்வர் என்று கூறி நான் ஓட்டு கேட்கவில்லை.

கருணாநிதியின் பொய்வாதத்தை அ.தி.மு.கவினர் நம்ப மாட்டார்கள். பொய் சொல்வதையே தனது வாழ்க்கையில்வாடிக்கையாகக் கொண்ட கருணாநிதிக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் தம்பித்துரை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+