ஜெயலலிதாதான் அடுத்த முதல்வர்: நடிகை அம்பிகா
நெல்லை:
ஜெயலலிதாதான் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புவதாக அ.தி.மு.க.கூட்டணிக்காகத் தேர்தல் பிரசாரம்செய்து வரும் நடிகைகள் அம்பிகாவும், ராதாவும் கூறினர்.
அவர்கள் திருநெல்வேலியில் அ.தி.மு.கவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
அவர்கள் வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நாங்கள் கடந்த 4 நாட்களாக பிரசாரம்செய்து வருகிறோம். எல்லா இடத்திலும் அ.தி.மு.கவுக்கு பெரும் ஆதரவு காணப்பட்டது. அனைவரும் ஜெயலலிதாமுதல்வராக வருவதையே விரும்புகிறார்கள்.
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டதால் எந்தவிதமான குழப்பமும் மக்களிடம்காணப்படவில்லை என்றனர்.
நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அம்பிகா கூறுகையில், ஒரு பெண்ணுக்கு பெண் துணை இருக்க வேண்டும்என்பதால் அ.தி.மு.கவுக்காக பிரசாரம் செய்கிறோம்.
இதற்கு முன்பு தேர்தல் நடந்தபோது நாங்கள் திரைப்படங்களில் பிசியாக இருந்ததால் பிரசாரத்துக்கு வரவில்லை.
அப்போது எங்களுக்கு அன்றாட வாழக்கை பற்றிய கஷ்டம் எங்களுக்கு தெரியாது.
திருமணம், குழந்தைகள், குடும்பம் என்று ஆன பின்பு அன்றாட வாழ்க்கை பற்றி எங்களுக்கு தெரிய வந்தது.அதனால் தான் இப்போது பிரசாரத்துக்கு வந்துள்ளோம்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது எங்களைப்பற்றி கிசகிசு வந்தால் நாங்கள் தாங்க முடியாமல்வருந்துவோம்.
ஆனால் ஜெயலலிதாமீது பல வழக்குகள், அவதூறுகள் வந்த போதும் அவர் கலங்காமல் இருக்கிறார். அதனால்தான்அவருக்கு ஆதரவாக பிரசராம் செய்கிறோம்.
எந்த பதவியை எதிபார்த்தும் நாங்கள் பிரசாரம் செய்யவில்லை. கேரளாவில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம்செய்யும் எண்ணம் இல்லை என்றார்.
உங்கள் மீது நில மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளதே என நடிகை ராதாவிடம் நிருபர்கள் கேட்டபோது, ராதாகூறுகையில், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
சின்னத்திரையோ, பெரிய திரையோ எதுவாக இருந்தாலும் நல்ல பாத்திரம் கிடைத்தால் நான் நடிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications