வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கியது
சென்னை:
தமிழகத்தில் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் மே 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 16 ம் தேதிதொடங்கி ஏப்ரல் 23 ம் தேதியுடன் முடிவடைந்தது.
ஏப்ரல் 24 ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. 26 ம் தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் தயார்செய்யப்பட்டது.
மொத்தம் 858 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 94 பேர் பெண்கள்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் புவனகிரி, கிருஷ்ணகிரி உள்பட சில தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில்உள்ள தேர்தல் துணை அதிகாரிகள் சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கியிடம் இறுதி வேட்பாளர்பட்டியலைக் கொடுத்தனர்.
இந்த முறை ஓட்டுப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. அதனால்வாக்குச்சீட்டுக்கள் தேவையில்லை. இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் போது ஒவ்வொருஇயந்திரத்திலிருந்தும் வேட்பாளர்களின் ஓட்டுக்கள் விவரத்தை குறிப்பதற்காக குறைந்த அளவிலானஓட்டுச்சீட்டுக்கள் அச்சடிக்கப்படவுள்ளன.
ஒரு இயந்திரத்துக்கு ஒரு சீட்டு என்ற அடிப்படையில் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் மற்றும் சின்னங்களுடன்ஓட்டுச்சீட்டுக்கள் அச்சடிக்கப்படவுள்ளன
இதற்காகத் தேவைப்படும் ஓட்டுச்சீட்டுக்கள் குறித்த பட்டியலையும் தேர்தல் அதிகாரிகள் கொடுத்தனர்.இதனடிப்படையில், சனிக்கிழமை அரசு அச்சங்களில் ஓட்டுச்சீட்டுக்கள் அச்சடிக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications