ஓசூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

ஓசூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.

சம்பவத்தன்று தர்மபுரியிலிருந்து ராயக்கோட்டை என்ற இடத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது, பஸ் கொல்லக்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் என்ற பள்ளிமாணவன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அரசு பஸ் டிரைவர் மாணவன் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். அப்போது திடீரென பஸ்சில்இருந்த பாகம் ஒன்று உடைந்தது. இதனால் பஸ் குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பள்ளி மாணவன் ரவிச்சந்திரன்உள்பட 3 பேர் அதே இடத்தில் இறந்தனர்.

பின்னர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த ருத்திரம்மா (30), நிர்மலா (24),நரசிம்மா (26) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவ்விபத்தில் இன்னொருவரும் உயிரிழந்தார். அவர்பெயர், விவரம் தெரியவில்லை.

இவ்விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 36 பேர் காயமடைந்தனர். இது குறித்து ஒசூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+