அத்தைக்கு மீசை முளைத்தால்தான் ஜெ. முதல்வர்: இல. கணேசன் கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அத்தைக்கு மீசை முளைக்காது. அதுபோல ஜெயலலிதா முதல்வராக முடியாது என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் இல. கணேசன் கிண்டலடித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி வாக்காளர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்யும் போதுபேசிய இல. கணேசன் கூறுகையில்,

சிங்காரச் சென்னையை உருவாக்கப் பாடுபட்டு வருகிறார் ஸ்டாலின். எதிரணி வேட்பாளரோ நேரம்கிடைக்கும்போது மட்டும்தான் அரசியலில் ஈடுபடுகிறார்.

திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது மூப்பனாரைத் துணை முதல்வர் போல்தான் கருணாநிதி நடத்தி வந்தார்.ஆனால் இப்போது ஜெயலலிதாவால் மரியாதை இழந்து நிற்கிறார்.

பஞ்சரான சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் ஜெயலலிதாவை முதல்வராக மூப்பனாரும் கம்யூனிஸ்டுகளும் ஏற்றுக்கொள்வார்களா?

ஜெயலலிதாவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு கருணாநிதியோ, கூட்டணியில் உள்ளவர்களோ காரணமல்ல.குற்றவாளிகள் யாரும் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கேற்ப ஜெயலலிதாவின்மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெயலலிதா முதல்வராக வருவது அத்தைக்கு மீசை முளைத்தகதைதான் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+