கோவையில் 3 வது நாளாக ஜெ. பிரசாரம்
கோவை:
கோவை மாவட்டத்தில் கிடைத்த உற்சாக வரவேற்பையடுத்து 3வது நாளாக கோவையில் சனிக்கிழமையும்பிரச்சாரம் செய்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதா கோவை மாவட்டத்திற்கு வியாழன்று மாலை வந்து சேர்ந்தார். முதல் நாள் சுற்றுப் பயணத்தில் 4 மணிநேரம் தாமதமானது. இந்த தாமதத்தால் மேட்டுப்பாளையம் செல்லாமல் கோவையிலேயே தனது முதல் கட்டப்பயணத்தை முடித்துக் கொண்டார்.
அடுத்த கட்டமாக வெள்ளியன்று சிங்காநல்லூர், சூலூர், பல்லடம், பொங்கலூர், திருப்பூ வழியாகமேட்டுப்பாளையத்தை அடைந்தார். அங்கிருந்து துடியலூர் வந்தார். அதற்குள் இரவு 10 மணி ஆனதால், மீண்டும்ரெசிடென்சி ஹோட்டலில் தங்கி விட்டார்.
ஆனால், திட்டமிட்டபடி அவர் ஈரோட்டில் தங்குவதாக இருந்தது. கோவையில் கிடைத்த வரவேற்பு மற்றும்உற்சாகத்தால் அவரது பயணத் திட்டம் மாறுதல் செய்யப்பட்டு விட்டது. சனியன்று மீண்டும் கோவைத் தொகுதியில்விட்டுப்போன பேரூர், கோவை மேற்கு, தொண்டத்தூர் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய முடிவுசெய்துள்ளார்.
திருப்பூர் பல்லடம் ஆகிய இடங்களில் 5 கிமீ தூரத்திற்கு மக்கள் கூடி நின்று ஜெயலலிதாவை பார்த்தனர்.
வழியெங்கும் உற்சாக வரவேற்பால் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரமித்துப் போனார். இதனால்சுற்றுப் பயணத்தில் அவர் தான் மாற்றம் செய்துள்ளாதாகத் தெரிகிறது. திட்டமிட்டபடி சனிக்கிழமை ஈரோடுமாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இந்நிலையில் ஈரோட்டில் தங்கியுள்ள முதல்வர் கருணாநிதி, சனிக்கிழமை கோபிச்செட்டிபாளையம் வழியாகமேட்டுப்பாளையம், துடியலூர் வந்து சேருகிறார். கோவையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications