மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தங்கரத வெள்ளோட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலில் தங்கரதவெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடந்தது.

மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், தமிழகத்தின் பிரபலமான அம்மன் தலமாகும். இங்கு தமிழகத்திலேயேஉயரமான தங்கத் தேர் செய்யப்பட்டுள்ளது. ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் இந்தத் தங்கத் தேர்வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க ரதத்தின் முதல் ஊர்வலம், வெள்ளிக்கிழமை மாங்காடு கோவிலில் நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார்ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் தலைமையில், சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் முன்னிலையில் நடந்தது.

தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் இந்த தங்க ரதத்தைத் செய்துள்ளது. மொத்ததம் 890 கிலோ செப்புத் தகடுகள்,172 கிலோ வெள்ளி மற்றும் 18.5 கிலோ சுத்தமான தங்கம் ஆகியவை இந்தத் தங்கத் தேர் தயாரிப்பில்பயன்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பூந்தமல்லி அருகே மாங்காடு அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+