தஞ்சையில் தி.மு.க செயலாளர் கொலை: 2 கொலையாளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது
சென்னை:
தஞ்சாவூரில் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.கொலையாளிகளை துரத்திச் சென்ற போலீஸார், அவர்களில் 2 பேரை சுட்டுக் கொன்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்தப் பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
தஞ்சையை அடுத்துள்ள அம்மாப்பேட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்தவர் சுரேஷ். புளியகுடி என்றகிராமத்தைச் சேர்ந்தவர். வலங்கைமான் தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் நடையழகனை ஆதரித்து பிரசாரம்செய்து வந்தார்.
அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள தி.மு.க தேர்தல் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்குமற்றொரு தி.மு.க. காரரான ரமேஷ் என்பவருடன் வந்தார். இருவரும் தேர்தல் பணி தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் அங்கு வந்தது. திமுதிமுவென இறங்கிய அவர்கள் சுரேஷைஅரிவாளால் வெட்ட முயன்றனர். நிலைகுலைந்த சுரேஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் விடாமல்துரத்திய கும்பல், குளக்கரை அருகே வைத்து சுரேஷை சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் படுகாயமுற்றசுரேஷ் அங்கேயே இறந்தார்.
சுரேஷைக் காப்பாற்ற முயன்ற ரமேஷையும் சரமாரியாக வெட்டித்தள்ளியது. பின்னர் அந்த வழியாக வந்த ஒருபஸ்சை நிறுத்தி அக்கும்பல் ஏறியது. டிரைவரை அரிவாள் முனையில் மிரட்டி பஸ்சை எடுத்தது. வழியில்சூரக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் பஸ்சை நிறுத்தி அவர்கள் இறங்கிக் கொண்டனர்.
சம்பவம் அறிந்ததும் போலீஸார் கொலையாளிகளின் காரை துரத்தி வந்தனர். சாலியமங்கலம் என்ற ஊரில் வந்துவிசாரித்தனர். அப்போது கொலையாளிகள் சூரக்கோட்டை சென்றது தெரிய வந்தது. அதையடுத்து போலீஸார்சூரக்கோட்டை விரைந்தனர்.
அப்போது கொலையாளிகள் தப்பிச் சென்ற கார் அந்தப் பகுதி வழியாக வந்தது. காரை நிறுத்திய போலீஸார்அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொட்டுசாவடி என்ற முந்திரிக்காட்டுப் பகுதியில்கொலையாளிகள் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் தஞ்சை எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் ரகுநாத், காவலர்கள் கருப்பையா,கணேசன் ஆகியோர் அப்பகுதிக்குள் நுழைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும், கொலையாளிகள் அவர்களைஅரிவாள்களால் வெட்ட முயன்றனர்.
இதில் காவலர்கள் கருப்பையா மற்றும் கணேசனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து எஸ்.பியும், சப்இன்ஸ்பெக்டரும், கொலையாளிகளை நோக்கி தங்களது கைத்துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் குண்டுபாய்ந்து இறந்தனர்.


Click it and Unblock the Notifications
