டெல்லியில் நிலநடுக்கம்
டெல்லி:
தலைநகர் டெல்லியின் மேற்குப்பகுதியில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
டெல்லியின் மேற்குப்பகுதியில் சனிக்கிழமை காலை 8.36 மணிக்கு 3.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்ஏற்பட்டது.
நிலநடுக்கம் குறித்து இந்திய பூகம்பவியல்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும்அதனைச்சுற்றியுள்ள சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்தான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய குஜராத் பூகம்பம் நடந்து மூன்று மாதங்களுக்குப்பிறகுஇந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அசாம், மேகாலயாவில் நிலநடுக்கம்:
இதற்கிடையே வெள்ளிக்கிழமை மாலை அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில்நிலநடுக்கம் ஏற்பட்டது என்று மத்திய பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், இந்த இரண்டு மாநிலங்களிலும் மாலை 5.59 மணிக்கு 4.0 என்ற ரிக்டர் அளவில்நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் குறித்த தகவல்கள் இல்லை என்றனர்.
ஹரியானாவில் நிலநடுக்கம்:
டெல்லியை அடுத்துள்ள ஹரியானாவிலும் சனிக்கிழமை காலை 8.36 மணிக்கு 3.8 என்ற ரிக்டர் அளவில்நிலநடுக்கம் ஏற்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications