அனுதாப அலையே வராது என்கிறார் ராதிகா
திருவள்ளூர்:
அனுதாப அலை வருவதற்கு என்ன பூகம்பமா நடந்துவிட்டது என்று "சித்தி" புகழ் ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.
வியாழக்கிழமை இரவு திருவள்ளூரில் திமுக கூட்டணிக்காக நடிகை ராதிகா வாக்கு சேகரித்தார்.
அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ஜெயலலிதாவின் அனைத்து வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு எந்தவித அனுதாபஅலையும் ஏற்படாது.
பூகம்பம் வரும்போதோ, குண்டுவெடிப்பில் மக்கள் இறக்கும் போதோதான் மக்கள் மனதில் அனுதாபம் ஏற்படும்.சட்டப்படியான ஒரு நடவடிக்கையைத் தேர்தல் அதிகாரிகள் எடுத்திருக்கும்போது, அதை எப்படி மக்கள்நிராகரிப்பார்கள்? இதனால் எவ்வாறு ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை ஏற்படும்?
ஒரு பெண்ணைப் பற்றி மற்றொரு பெண்ணே தவறாகப் பேசுவது தவறு. ஆனாலும் சட்டத்துக்குப் புறம்பானசெயல்களைச் செய்யும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்?
ஒரு பெண்ணுக்கு ஆணவம் இருக்கக்கூடாது. அது ஜெயலலிதாவிடம் இருக்கிறது. "சித்தி" தொடரை அனைவரும்டி.வி.யில் பார்க்கிறீர்கள். அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு டி.வி. சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications