தமிழகத்துக்கு மீண்டும் இலங்கை அகதிகள் வருகை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் மீண்டும்தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கை வவுனியா, பேசாலை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலிருந்து 11 குடும்பத்தினர் அகதிகளாக வந்துள்ளனர்.இதில் 13 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள், 6 பேர் குழந்தைகள்.

இவர்கள் படகுக்கு ரூ 3,000 கொடுத்து இலங்கையிலிருந்து தப்பி வந்துள்ளனர். இவர்கள் 29 பேரும் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைக்கு வந்தனர்.

இவர்களை போலீஸார் வேன் மூலம் தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.பின்னர் இவர்களை மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மாதம் 16ம் தேதி முதல் தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால்மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதில்லை.

ராமேஸ்வரம் கடலில் இந்திய - இலங்கை ராணுவ வீரர்களின் ரோந்து பணியும் தீவிரமாக இருக்கும் நிலையில் 29பேர் கடல் வழியாக தப்பி வந்துள்ளது அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அகதிகள் கூறுகையில், இன்னும் பல குடும்பத்தினர் தலைமன்னார் காட்டு பகுதிகளில் பதுங்கி வாழ்ந்துவருகிறார்கள். படகு கிடைக்காததால் அவர்களால் தப்பி வர முடியவில்லை என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+