புலிகள் பதிலடி தாக்குதல்: இலங்கை ராணுவம் பின்வாங்கியது
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாத இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு ஓடஆரம்பித்துள்ளது.
விடுதலைப்புலிகள் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி, இனக்கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும்நல்லெண்ணத்துடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்து, இலங்கை அரசும் இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் எனகேட்டுக் கொண்டது.
ஆனால் இலங்கை அரசு இதை ஏற்க மறுத்த விடுதலைப்புலிகள் மீதான ராணுவ தாக்குதலை தொடர்ந்தது.ஆனாலும் விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தத்தை நீட்டித்தனர்.
இந்நிலையில 4 மாதமாக நீட்டித்து வந்த சண்டை நிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை விடுதலைப்புலிகள் வாபஸ்பெற்றனர்.
இதையடுத்து புதன்கிழமை இலங்கை ராணுவ வீரர்கள் அகினிகிலியா-1 என்ற பெயரில் புலிகளின் மீது தாக்குதலைதொடங்கியது. மூன்று நாட்களாக புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்துவருகிறது.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத இலங்கை ராணுவம் ஓடஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து ராணுவ அமைச்சக அதிகாரிகள் சனிக்கிழமை கூறுகையில், விடுதலை புலிகள் நடத்தி வரும் கடும்தாக்குதலால் இலங்கை படைகள் முன்னேற முடியமால் தங்கள் பழைய நிலைக்கு திரும்பி விட்டனர்.
முன்னதாக இலங்கை படை முன்னேறி புலிகள் வசமிருந்த பகுதிகளை கைப்பற்றினர். ஆனால் புலிகளின் பீரங்கிதாக்குதல் கடுமையாக இருப்பதால் ராணுவத்தால் தொடர்ந்து முன்னேற முடியாமல் பழைய ராணுவ எல்லைக்கேதிரும்பி விட்டனர்.
3 நாட்களாக நடந்த சண்யிைல் 5 ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 187 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 860பேர் காயமடைந்துள்ளனர். இதில் 430 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 190 விடுதலைபுலிகள்கொல்லப்பட்டுள்ளர். 400 பேர் காயமடைந்துள்ளனர் .
ராணுவ வீரர்கள் பலரும் இறந்தது கண்ணி வெடி வெடித்ததால்தான். விடுதலை புலிகள் கொழும்பில் கடும்தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் ராணுவம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அதுதவிர்க்கப் பட்டுவிட்டது என்றனர்.
விடுதலைப்புலிகளின் வானொலி தெரிவிக்கையில், 3 நாட்களாக நடந்த சண்டையில் 43 விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டுள்ளனர். 1,500 இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சென்ற ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்ட யானை இறவு பகுதியை கைப்பற்ற இலங்கை ராணுவம் எடுத்த முயற்சிமுறியடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இறந்து போன 30 இலங்கை ராணுவ வீரர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம்ஒப்படைத்தனர். இந்த உடல்கள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக செஞ்சிலுவைசங்கத்தினர் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications