சேப்பாக்கத்தில் இன்று கருணாநிதி பிரசாரம்
சென்னை:
திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, தான் போட்டியிடும் சென்னை சேப்பாக்கம் தொகுதியில்ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
முதல்வர் கருணாநிதி தமிழகம் முழுவதிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். முதல் கட்ட தமிழக தேர்தல்சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட அவர் கடந்த வாரம் தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் வீதி,வீதியாக சென்று பிரசாரம் செய்தார்.
2 நாட்கள் அங்கு பிரசாரம் செய்த பின்னர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பிறகு 2-வது கட்ட தமிழகதேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
2-வது கட்ட பிரசாரத்தை முடித்துக் கொண்ட கருணாநிதி, ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை சேப்பாக்கம்தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். வீதி, வீதியாக சென்று அவர் தனக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைகேட்டுக் கொள்கிறார்.
கருணாநிதியின் 2-வது கட்ட சேப்பாக்கம் தொகுதி பிரசாரத்திற்காக அப்பகுதி திமுகவினர் சிறப்பானஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications