பா.ஜ.கவுக்கு தாவும் த.மா.கா.தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

அதிமுக அணியால் அதிருப்தியடைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பாரதிய ஜனதாவில் இணைந்து வருகின்றனர் என வெங்கய்யா நாயுடுதெரிவித்தார்.

தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள வெங்கையா நாயுடு கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலம், நீலகிரி, கோவை, கம்பம், ஸ்ரீவில்லிப்புத்தூர்,விருதுநகர், திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை மற்றும் பாண்டிச் சேரி ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்.

இதுவரை நான் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின் மூலம் எந்த அலையும் தமிழகத்தில் வீசவில்லை என்பதை உணர்ந்துள்ளேன்.ஆனால், மத்திய, மாநில அரசுகளின் நன்மையை மக்கள் அறிந்துள்ளனர். தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரானஅலை எதுவும் இல்லை.

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி கிராமப்புறங்களில் நல்ல முன்னேற்றங்களைச் செய்துள்ளார். ஒவ்வொரு கிராமத்திற்கும் ரோடுபோட்டுள்ளார். இதற்கு இணையாக மத்தியில் வாஜ்பாயும் இந்தியாவை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளார்.

சாதிமதங்களை ஒற்றுமைப்படுத்தும் விதத்தில் தமிழகத்தில் திமுக கூட்டணியை அமைத்துள்ளார் கருணாநிதி.

மக்கள் அதிமுக, தமாகா கூட்டணியை நம்புவதாக இல்லை. அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.அங்கு சேர்ந்ததை அவமானமாகக் கருதும் தொண்டர்கள் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

தமிழ் மாநில காங்கிரசும், காங்கிரசும் நேர்மையான ஆட்சி அமைப்பதாகக் கூறுகின்றனர். காங்கிரஸ் நேர்மையான ஆட்சிஅமைப்போம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் எப்படி தனித்து ஆட்சி அமைக்கப் போகிறது?எப்படியிருந்தாலும் அது அதிமுகவிற்கு துணைபோயே ஆக வேண்டும். எப்படி இவர்கள் நேர்மையான ஆட்சியைத் தர முடியும் என்பதைமக்கள் சிந்திக்க வேண்டும்.

தேர்லில் போட்டியிட முடியாமலேயே, முதல்வராவேன் என்கிறார் ஜெ. திருமணம் ஆகாமல் குழந்தை பெற முடியுமா? மக்கள்எல்லோரும் ஒன்றும் அறியாத அப்பாவி என நினைத்துக் கொண்டு இதனை நம்ப வைக்க முயன்று வருகிறார்.

அவரது வேட்புமனுவை நிராகரிக்க அவரே முயற்சி செய்தார். எனவே நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுஇந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு. அவர்கள் இந்த மண்ணின் விதிமுறைப்படி நிடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த நிடவடிக்கையை தவறுஎன்று கூறுவது அபத்தமானது.

தேர்தலில் நிற்க வேட்பாளரின் மனு நான்கு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்படலாம்.

1. மனநிலை சரியில்லாதவர்கள், மனநிலையில் நிலையற்றவர்கள். 2. இந்திய குடியுரிமை பெறாத வெளிநாட்டினர். 3.திவாலாகியவர்கள் 4. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்றவர்கள் என சட்டமேவரையறுக்கப்பட்டுள்ளது. இதில், தன்னுடைய பக்கமே "கோல் அடித்துக் கொண்டது அதிமுக.

தமிழகத் தேர்தலில் எங்களது கூட்டணி திமுகவுடன் தான். மதிமுகவுடன் இல்லை. பல மாநிலங்களில் தேசிய கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகள் மாநிலத்தில் எதிர் அணிகளாக இருக்கின்றன. திமுகவிற்கும் மதிமுகவிற்கும் இடையே நிலவும்போட்டியால் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது. மதிமுக வின் தாக்குதல், எதிரியின் மீது தான்இருக்க வேண்டுமேஒழிய, கூட்டணிக் கட்சியின் மீது இருக்கக் கூடாது.

டெஹல்கா.காம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு ஏன் எடுத்துக் கொள்ள விடாமல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்துவருகின்றனர். நீதி விசாரணையை ஏற்றுக் கொள்ளும் அவர்கள், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணையை ஏற்றுக் கொள்ளமறுக்கின்றனர். நாடாளுமன்றத்தை செயல்படாமல் தடுத்து, நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவது தான் அவர்களுடைய எண்ணமாகஉள்ளது என்றார் வெங்கய்யா நாயுடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+