என் ஓட்டு திமுகவுக்கே: நடிகர் விஜய்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த தேர்தலில் திமுகவுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இந்த முறையும் திமுகவுக்குத்தான் எனது ஓட்டு என்று நடிகர் விஜய்தெரிவித்தார்.
நடிகர் விஜய் காலைக்கதிர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி:
நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. கட்சி சம்பந்தப்பட்டவனும் இல்லை. மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள்என்று பார்த்து அவர்கள் கட்சிக்கு ஓட்டுப் போடுவேன்.
எனக்கு திமுக தலைவர் கருணாநிதியையும், மேயர் ஸ்டாலினையும் பிடிக்கும். நான் திரையுலகில் பிரபலமானபோது என் அப்பா முதல்வர்கருணாநிதியிடம் அழைத்துச் சென்றார். அவரது அணுகுமுறையும், நல்ல உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.
அவர்களைப் பிடிக்கும் என்பதற்காக தேர்தல் பிரசாரத்திற்கெல்லாம் போக மாட்டேன். எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனக்கு அரசியல் தெரியாது என்று தனது பேட்டியில் கூறினார் நடிகர் விஜய்.












Click it and Unblock the Notifications