அதிமுகவுக்கு வந்த வெப்சைட் சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகவின் வெப்சைட்டுக்குள் புகுந்த சிலர், இந்த தளம் விற்பனைக்கு உள்ளது என்று செய்தி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதிமுக தன்னுடைய கட்சிக்காக வெப்சைட் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த வெப்சைட்டில் அதிமுகவின் வரலாறு மற்றும் பல அரியபுகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் முகவரி www.aiadmk.org என்பதாகும். இந்த வெப்சைட்டில் ஹாக்கர் எனப்படும் குழப்பவாதிகள் புகுந்து தங்கள் கைவரிசையைக்காட்டியுள்ளனர்.

இந்த வெப்சைட்டின் முதல் பக்கத்திலேயே இந்த வெப்சைட் அதன் உரிமையாளரால் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. வாங்கவிருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என்ற இடத்தில் ஈ மெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவால் தமிழகத்துக்கு நன்மையா? தீமையா? என்று கேள்வி கேட்டு தீமை என்று பலர் பதிலளித்திருப்பது போலவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதிமுக வெப்சைட்டுக்குள் நுழைந்து அக்கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஹாக்கர்கள் யார் என்று தெரியவில்லை. இது அரசியல்நோக்கத்துடன் தாக்கப்பட்ட தாக்குதலா என்றும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+