பிரிட்டனில் குவியும் இந்திய சாஃப்ட்வேர் நிபுணர்கள்
லண்டன்:
உலகப் புகழ் பெற்று விளங்கும் இந்திய சாஃப்ட்வேர் நிபுணர்களை இந்தியாவிற்கே திரும்பிப் போகுமாறுஅமெரிக்கா விரட்டினாலும், இங்கிலாந்து அவர்களைக் கைகுலுக்கி வரவேற்கிறது.
இந்திய சாஃப்ட்வேர் நிபுணர்கள் இங்கிலாந்தில் குவிய ஆரம்பித்து விட்டனர்.
வெளிநாட்டில் இருந்து வரும் சாஃப்ட்வேர் நிபுணர்களில் மூன்றில் இரண்டு பேர் இந்தியர்கள்தான்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து மேற்கொண்ட பல சலுகைகள் காரணமாக இந்திய சாஃப்ட்வேர் நிபுணர்களுக்குக்அடித்தது அதிர்ஷ்டம்.
கடந்த ஆண்டு மொத்தம் 18,257 வெளிநாட்டு சாஃப்ட்வேர் நிபுணர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது இங்கிலாந்து.இதில் 11,474 பேர் இந்திய சாஃப்ட்வேர் நிபுணர்கள்.
இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக, 2,034 சாஃப்ட்வேர் நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளனர். இவர்களில்பெரும்பாலோனோர் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.
அதேபோல், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 748 சாஃப்ட்வேர் நிபுணர்களில் பெரும்பாலானவர்களும்,ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த 708 சாஃப்ட்வேர் நிபுணர்களில் பெரும்பாலானவர்களும் இந்தியாவைப்பிறப்பிடமாகக் கொண்டுள்ளனர்.
சீனாவில் இருந்து 221 சாஃப்ட்வேர் நிபுணர்களும், பாகிஸ்தானில் இருந்து 132 சாஃப்ட்வேர் நிபுணர்களும்,இலங்கையிலிருந்து 69 சாஃப்ட்வேர் நிபுணர்களும், வங்களா தேசத்திலிருந்து 15 சாஃப்ட்வேர் நிபுணர்களும்மட்டுமே இங்கிலாந்துக்கு வந்துள்ளனர்.
"சாஃப்ட்வேர் நிபுணர்களுக்குச் சலுகைகள் அளிப்பதற்காக நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும்வெற்றியடைந்துள்ளன. ஆனாலும் இது கடலில் ஒரு துளி போலத்தான். சாஃப்ட்வேர் துறையில் இன்னும்வாய்ப்புக்கள் ஏராளம்" என்றார் ஹர்தீப் பூரி என்னும் துணைத் தூதரக அதிகாரி.
இந்திய-இங்கிலாந்து வர்த்தகம் 7.5 பில்லியன் டாலர்களில் இருந்து 12 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கஇருக்கிறது என்றும் பூரி கூறினார்.
2003ம் ஆண்டில் 6,20,000 சாஃப்ட்வேர் நிபுணர்களை இங்கிலாந்து நியமிக்க இருக்கிறது என்று ஒரு ஆய்வுநிறுவனம் தெரிவிக்கிறது.
இங்கிலாந்து வர்த்தகத்தில் ஈ-பிசினஸ் ஈ-பிசினஸ் என்று அழைக்கப்படும் எலக்ட்ரானிக் வர்த்தகம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. இவ்வர்த்தகத் துறையில் இந்த வருடத்தில் மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பணியாளர்கள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரிக்கும்.
பணியாளர்கள் பற்றாக்குறை இப்படியே அதிகரித்துக் கொண்டே போனால், பல வர்த்தகத் துறைகளில் இங்கிலாந்துபோட்டியிட இயலாத ஒரு சூழ்நிலை உருவாகிவிடும் என்று ஒரு அறிக்கை கூறியது.
அதனால் பணிபுரிவதற்கான விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications