மக்களுக்காகவே வாழ்கிறேன்: ஜெ
ஈரோடு:
எனக்கென்று எதுவும் இல்லை, மக்களுக்காகவே இருக்கிறேன் என ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்பேசினார்.
சத்தியமங்கலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஜெயலலிதா பேசியதாவது:
மு.க ஸ்டாலினை முதல்வராக்க என் மீது வழக்குப் போட்டு தேர்தலில் நிற்க விடாமல் செய்து விட்டார் கருணாநிதி.கேரளாவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இருந்தும்அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நான்கு இடங்களில் நான் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தும் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனக்கு அநீதிஇழைக்கப்பட்டுள்ளது. எனவே மக்களாகிய உங்களிடம் நீதிகேட்டு வந்துள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கள்ளச்சாரய சாவுகள் அதிகரித்துவிட்டன. இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. மக்களுக்குத் தேவையான எந்தத் திட்டமும்நறைவேறவில்லை.
96ம் ஆண்டு என் மீது பொய் வழக்குப் போட்டு என்னை நீதிமன்றத்திற்கு அலைக் கழித்ததுதான் சாதனை. பொய்ப்புகார்களை முறியடிக்க நீங்கள் தான் நீதி வழங்க வேண்டும். சிமெண்ட் விலையால் ஊழல் புரிந்துள்ளனர்.விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நான் இருப்பது உங்களுக்காகத் தான். எனக்கென்று எதுவுமில்லை. அதிக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால்மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications