சென்னையில் இன்று கருணாநிதி பிரசாரம்
சென்னை:
முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை சென்னை நகர் முழுவதிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 கட்டமாக சுற்றுப்பயணம் செய்து வாக்குசேகரித்துள்ளார் கருணாநிதி. தற்போது 3-வது கட்டப் பிரசாரத்தில் இறங்கவுள்ளார்.
செவ்வாய்க்கிழமை சென்னை சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். சேப்பாக்கத்தில் ஏற்கனவே 2முறை பிரசாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கருணாநிதி திறந்த வேனில்சென்று பிரசாரம் செய்கிறார்.
இது முடிந்ததும், புதன்கிழமை தனது 3-வது கட்ட மாவட்ட சுற்றுப்பயணத்தைத் துவக்குகிறார். திருநெல்வேலி மாவட்டம்ஆலங்குளம், சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்யும் கருணாநிதி, திருச்செந்தூர், தூத்துக்குடிஆகிய பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.