எம்.ஜி.ஆர். ஆட்சி வர வேண்டும் .. மூ ப்பனார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும். ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனார் சென்னையில் பிரசாரம் செய்தார்.

காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முழக்கம் செய்த மூப்பனார் இப்போது எம்.ஜி.ஆர்.ஆட்சிக்கு மாறி விட்டார். சென்னையில் திங்கள்கிழமை தனது பிரசாரத்தைத் துவக்கிப் பேசிய அவர் எம்.ஜி.ஆர். ஆட்சிஅமைப்போம் என்று அடிக்கடி கூறினார். இது தமாகா தொண்டர்களுக்கு எப்படி இருந்ததோ, அதிமுக தொண்டர்களுக்கு ரொம்பவேசந்தோஷத்தைக் கொடுத்தது.

உடல் நலம் பெற்றுத் திரும்பியுள்ள மூப்பனார் திங்கள்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். ஆழ்வார்ப்பேட்டையிலுள்ளதனது வீட்டிலிருந்து கிளம்பி அடையாறு சாஸ்திரி நகர் தொலைபேசி இணைப்பகம் அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்குஅவர் வந்தார். அங்கு அவர் பேசியதாவது:

மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மைத்ரேயன் நல்லவர். தொகுதிக்காக பாடுபடக் கூடியவர். அவருக்கு நீங்கள் இரட்டைஇலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

காமராஜரை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசி விட்டதாக கருணாநிதி கூறி வருகிறார். அவர் கூறுவது தவறு. கன்னியாகுமரியிலிருந்துஓட, ஓட விரட்டப்பட்டது யார் என்று எனக்குத் தெரியும். நான் அதிகம் பேச விரும்பவில்லை. கருணாநிதியும் அதிகம் பேசவேண்டாம்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைய ஜெயலலிதாவை முதல்வர் ஆக்குங்கள். இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்என்றார் மூப்பனார்.

இதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா ஆகியோரும் பேசினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+