கொலை வழக்கு: 7 பேருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கோவை:
ஆளைக் கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ., உள்பட 7 பேருக்கு 25 ஆண்டுகாலத் தண்டனைவிதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம், பொங்கலூரில் பனப்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமிக் கவுண்டர். இவருக்கும் இவரது நிலத்திற்கு அருகில்உள்ள தாமோதரசாமி நாயுடுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் தாமோதரசாமி நாயுடுவுக்கும், கருப்புசாமிக் கவுண்டருக்கும் இடையே ஒரு போட்டி ஏற்பட்டது. இவர்கள் இருவரின்நிலத்திற்கும் அருகில் உள்ள மற்றொரு நிலத்தை விலைபேசினர். இதனை கருப்புசாமிக் கவுண்டர் வாங்கிக் கொண்டார்.
இந்நிலையில் கருப்புசாமிக் கவுண்டர் மகன் முத்துச்சாமி (35), பல்லடம் அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போதுதமோதரசாமி நாயுடுவின் கும்பல், அவரை மொபட்டிலிருந்து கீழே தள்ளி விட்டு, ஜீப்பில் அவரைக் கடத்திச் சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட முத்துச்சாமி, 30.11.97ம் தேதி கொலை செய்யப்பட்டு அமராவதி ஆற்றில் தூக்கி வீசப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ.,பழனிச்சாமி, தாமோதரசாமி நாயுடுவின் மகன்கள்ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், ராஜமாணிக்கம், சுந்தரம், மயில்சாமி, முத்துக்கிருஷ்ணன், தங்கத்து, கோவிந்தசாமி ஆகிய 9 பேரைக்கைது செய்தனர்.
இவர்கள் மீது ஆளைக் கடத்தி, கொலை செய்து ஆற்றில் வீசியது தொடர்பாக இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே தங்கமுத்து, கோவிந்தசாமி ஆகிய இருவரும் இறந்து விட்டனர்.
கோவை இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில், கொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக 7 பேருக்கும் தலா 14ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பிற வழக்குகளான ஆள் கடத்தல், மற்றும் தடயத்தை மறைத்தல் ஆகியகுற்றங்களுக்காகவும் சேர்த்து 25 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தவழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ, பழனிச்சாமி, கிணத்துக் கடவு தொகுதியில் 91ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவர். தற்போது உழவர் உழைப்பாளர் கட்சியின் பொருளாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications