காஷ்மீர் பிரச்சனை: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில், இந்தியப் பிரதிநிதி கே.சி.பந்த் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதத்தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை துவக்குவதற்காக, பந்தின் ஆதரவாளர்கள் பெரும் முயற்சி எடுத்துவருகிறார்கள்.

இந்தியப் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்ட உடனேயே பந்த் ஸ்ரீநகர் கிளம்ப முடிவு செய்தார். ஆனால் இப்போதைக்குவேண்டாம் என்று அவருடைய ஆலோசகர்கள் தடுத்து விட்டனர்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பந்த் ஸ்ரீநகருக்கு வருவதை தற்போது பல ஹூரியத் தலைவர்கள்விரும்பவில்லை. எனவே அவர்களுடைய அழைப்புக்காக பந்த் காத்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய ஆதரவாளர்கள் ஏற்கனவே ஸ்ரீநகர் சென்று, பந்த் இங்கு வருவதற்கான நிபந்தனைகளைப் பற்றிபிரிவினைவாதத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

பெரும்பாலான ஹூரியத் தலைவர்கள் பந்த்தின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தாங்கள் இது தொடர்பாகப் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

"காஷ்மீர் காலநிலை பற்றி பேசுவதற்காக வேண்டுமானால் பந்த் இங்கு வரட்டும், பேசுவோம். ஆனால்பாகிஸ்தானுடன் கலக்காமல் அரசியல் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாரில்லை" என்று கூறியுள்ளார் ஒரு மூத்தஹூரியத் தலைவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+