ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் பிரசாரம்
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் மகனும், சென்னை நகர மேயருமான மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில்புதன்கிழமை வீதி, வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார்.
ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விடியல் சேகர்களத்தில் இருக்கிறார். தி.முகவின் கோட்டையாக கருதப்படும் ஆயிரம் விளக்குப் பகுதியில் ஸ்டாலின் தனது பிரசாரத்தைத்தீவிரப்படுத்தியுள்ளார்.
புதன்கிழமை காலை 8 மணிக்கு ஜெமினி மேம்பாலத்திலிருந்து திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பயணத்தைத் தொடங்கினார். 500க்கும்மேற்பட்ட தி.மு.கவினர் அவருடன் பல வாகனங்களில் பின் தொடர்ந்தனர். திடீர் நகர், வாலஸ் கார்டன், ரட்லன் கேட் ஆகியபகுதிகளில் ஸ்டாலின் வாக்கு கேட்டார்.
காதர் நவாஸ்கான் சாலையில் ஏராளமான முஸ்லீம்கள் திரண்டு வந்து ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அஜீஸ் தெரு,சுதந்திரா நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
கிம்ஸ் சாலையில் ரோஜா மலர்களை சாலையில் தூவி பொதுமக்கள் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். பத்தாரி பகுதியில் ஸ்டாலின்கூடியிருந்தவர்களிடையே பேசுகையில், உங்களின் வேட்பாளராக மீண்டும் வந்துள்ளேன். தி.மு.கவின் பொற்கால ஆட்சி தொடர எங்களைஆதரியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications