சோனியாவுக்கு சுர்ஜித் சொல்லே மந்திரம்: மத்திய அமைச்சர்
கோவை:
சோனியா காந்தியின் ஆலோசகராக ஹர்கிஷன் சிங் சுர்ஜித் இருந்து வருகிறார். சுர்ஜித் இன்று சொல்வதை சோனியா நாளை அப்படியே திருப்பிச்சொல்கிறார். இருந்தாலும் மேற்கு வங்கம், கேரளாவில் மட்டும் ஏன் இரு துருவங்களாக இருக்கிறார்கள் எனத் தெரியவில்லைஎன மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் கூறியுள்ளார்.
கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் ஓ.ராஜகோபால் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதா நிர்ப்பந்தம் காரணமாக ஹர்கிஷன் சுர்ஜித், அவரின் வேட்பு மனு தள்ளுபடியானதை நியாயப்படுத்தி வருகிறார். நீதிமன்றத்தீர்ப்பை நிலை நாட்டப்பட்டு, பிரதிநிதித்துவ விதிமுறைப்படிதான் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பாலகிருஷ்ணன் பிள்ளையின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பழைய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி இந்தமனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் முரண்பாடானது தான். இருந்தாலும், சட்டத்தில் உள்ள ஓட்டை கராணமாக அவரது மனுஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் சட்ட மறு சீரமைப்பு செய்யப்படும்போது இத்தகைய குறைபாடுகளை நீக்க வேண்டும்.
ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இன்று சொல்வதை நாளை சோனியா அப்படியே திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சோனியாவின்ஆலோசகராகவே இருக்கிறார். டெல்லி முதல் கன்னியாகுமரி வரை ஒரே பேச்சைப் பேச்சாக இருந்தாலும் கேரளாவிலும்மேற்கு வங்கத்தில் மட்டும் எதிரிகளாக மாறி விட்டது வியப்பிற்குரியாதாகவே இருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளாக கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியும், மார்க்சிஸ்ட் கூட்டணியும் மாறி மாறி ஆட்சி நடத்தி வந்துள்ளன. ஆனால்ஒரு வளர்ச்சியும் மாநிலத்தில் இல்லை.
பொருளாதார முன்னேற்றத்தில் பின் தங்கிய மாநிலமாக கேரளா உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்கள் ஆண்டுக்கு 6 சதவீதம்முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று வருகிறது. கேரளாவோ, ஒரு சதவீதத்திற்கும் கீழ் தான் வளர்ச்சி பெற்று வருகிறது.
கேரள சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இயலாவிட்டாலும், ஒரு சிலஇடங்களில் வென்று சட்டசபைக்குச் செல்லும் என்றார் ஓ.ராஜகோபால்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications