கருணாநிதி மேடையில் பரபரப்பு ஏற்படுத்திய தொண்டர்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
பிரசாரக் கூட்டத்தின் போது முதல்வர் கருணாநிதி பேசிக் கொண்டிருந்த மேடையை நோக்கி ஆவேசமாக வந்தார்ஒரு தொண்டர். இதனால் கருணாநிதியின் பேச்சு சில நிமிடங்கள் தடைபட்டது.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு தொண்டர் "வெற்றி வெற்றி" என்று முழங்கிக் கொண்டே மேடையை நோக்கி வேகமாக வந்தார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்தும் அவர் அடங்கவில்லை.
தன் கையில் வைத்திருந்த சால்வையைக் கருணாநிதியிடம் அவர் கொடுக்க அனுமதிக்கப்பட்ட பிறகே, பரபரப்புஅடங்கியது.
தொடர்ந்து பேசிய கருணாநிதி "கட்சிக்கு வெற்றி தேவைதான். ஆனால் வெறி கூடாது. இதை அனைவரும்சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications