அடுத்த 15 நாட்களில் ஜெ. முதல்வர்: ராமதாஸ்
விழுப்புரம்:
இன்னும் 15 நாட்களில் ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சராகப் பதவி ஏற்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும். ஆனால் திமுக கூட்டணியோ ஒரு ஜீரோ கூட்டணி.
சங்கராபுரம் தொகுதியில் நமது வெற்றி உறுதியாகிவிட்டது. எதிர் அணி வேட்பாளருக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் செய்யவேண்டும்.
பல கிராமங்களில் திமுக வேட்பாளர்கள் நுழையக்கூட முடியவில்லை. அதிமுக கூட்டணியினர் அனைவரும் தேனீக்களைவிடசுறுசுறுப்பாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
இரு மத்திய அமைச்சர் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு வந்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
ஜெயலலிதாவைச் சிறையில் தள்ளிய கருணாநிதி, வேட்பு மனுக்களையும் தள்ளுபடி செய்யத் தூண்டி விட்டுள்ளார். ஆனால் தமிழகத்தில்ஜெயலலிதா ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இன்னும் 15 நாட்களில் ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியை ஏற்பார் என்று ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications