அமெரிக்க ஸ்டைலில் பாக்கெட் மணி சம்பாதிக்கும் இளைஞர்கள்
சென்னை:
"பிளஸ் 2 தேர்வு முடிந்து விட்டது; கல்லூரியிலும் பரிட்சை முடிந்து விட்டது. கோடை விடுமுறையில் அப்பாஎப்படியும் பாக்கெட் மணி தரமாட்டார். என்ன செய்யலாம்?" என்று யோசித்த சென்னை இளைஞர்கள்அமெரிக்கப் பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டனர்.
ஆம். விடுமுறையில் எங்காவது வேலை செய்து தம்முடைய பாக்கெட் மணியைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்றுமுடிவெடுத்து, செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டனர்.
சென்னையின் சில உள்ளூர் செய்தித் தாள்களில்கூட "கோடை விடுமுறையில் வேலை செய்ய ஆட்கள் தேவை" என்றவிளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு பழைய பைக் வாங்குவதற்கு எப்படியும் குறைந்தது 10,000 ரூபாய் தேவை. என்னுடைய சேமிப்பில் இப்போது2,000 ரூபாய் இருக்கிறது. அப்பா எப்படியும் இன்னமொரு 2,000 ரூபாய் தருவார். மீதி 6,000 ரூபாயைஎப்படியாவது இந்த இரண்டு மாதங்களுக்குள் சம்பாதித்து, நிச்சயம் பைக் வாங்கிடுவேன் என்று 11ஆவது வகுப்புமாணவர் ஒருவர் கூறுகிறார்.
12ஆவது வகுப்பு படிக்கும் ஆஷா என்ற மாணவி வெப் பக்கங்கள் வடிவமைக்கும் வேலையில் வெகு மும்முரமாகஇருக்கிறார். ஒரு பக்கத்துக்கு 1,500 முதல் 5,000 ரூபாய் என்று நல்ல வசூல் செய்கிறார்.
தவிர ப்ரவுசிங் சென்டர், டி.டி.பி. சென்டர், ஜெராக்ஸ் கடை என்று கடைகளையும் நடத்தி, சம்பாதித்து வருகின்றனர்சென்னை இளைஞர்கள்.
வாய்ப்பாட்டு கற்றுக் கொள்வது முதல் வெப் டிசைனிங் கற்றுக் கொள்வது வரை ஏராளமான கோடைகாலவகுப்புகளையும் இளைஞர்கள் நடத்தி அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கற்றுக் கொடுப்பதால் அறிவும் வளருது; கைச்செலவுக்குக் காசும் கிடைக்குது என்ற சந்தோஷத்துடன் சென்னைஇளைஞர்கள் வலம் வருகிறார்கள்.
"காலை 6.30 முதல் 8.00 வரை யோகா வகுப்பு. 9 மணி முதல் 11 மணி வரை டியூசன். பிறகு பிற்பகல் ஒரு மணி வரைடிரைவிங். மதிய உணவு முடித்த பின்னர், ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பிரவுசிங் சென்டரில் வெப்பேஜ் டிசைனிங். மாலை 5 மணிக்கு மேல் நண்பர்களுடன் ஐஸ்க்ரீம் பார்லரில் அரட்டை. 6 மணி முதல் 7 மணிவரை கராத்தே கிளாஸ்" - ஒரு சாதாரண சென்னை இளைஞனின் நாள் இப்படித்தான் போகிறது.
இவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவம்தான். வெளிநாட்டில் படிப்பதற்காகவோ, வேலைக்காகவோ போகும்போது, பகுதி நேரத்தில் வேலை செய்ய இந்த அனுபவம் அவர்களுக்கு நிச்சயம் உதவும்" என்கிறார் ஒருஇளைஞரின் அம்மா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications