For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் புதிய இந்துக் கோவில்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

அமெரிக்காவில் வாழும் இந்துக்களுக்காக 2.2 மில்லியன் டாலர் செலவில் லாஸ் வேகாஸில் ஒரு புதிய இந்துக்கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்துக் கோவில் மற்றும் கலாசார மையம் என்று அழைக்கப்படும் இது, லாஸ் வேகாஸ், நேவடா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 500 இந்தியக் குடும்பங்களுக்குச் சேவை செய்து வருகிறது.

கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்ட இந்த மையத்தில் சிவன், ராமர், மகாவீரர் மற்றும் துர்கையம்மன் போன்றகடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

மார்பிள்களால் ஆன இந்தச் சிலைகள் ஒரே மாதத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன.

மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மையத்தின் துவக்க விழாவில், ராதா-கிருஷ்ணா, திருப்பதி, விநாயகர் மற்றும்லட்சுமி ஆகிய கடவுள் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் மையத்தில், 5,000 சதுர அடி பரப்பிலான பிரார்த்தனை ஹால்ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியர்கள் தங்குவதற்காக, இம்மையத்தின் அருகிலேயே ஒருகுடியிருப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

பகவத் கீதை, யோகா மற்றும் இந்து மதம் சம்பந்தமானவற்றைத் தெரிந்து கொள்வதற்காக வகுப்புக்களும்இக்குடியிருப்பிலேயே நடத்தப்படுகின்றன. இங்கு நூலகம் ஒன்றும் உள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X