அதிமுகவிற்கு ஆதரவளிக்கிறது சிவசேனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்கப் போவதாக சிவசேனைக் கட்சியின் தமிழகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தென்மறவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஹிந்துத்துவத்திற்கு எதிராகப் பேசி வந்த கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை எதிர்ப்பதன் மூலம் திமுக கூட்டணிமுழுவதையும் எதிர்க்கிறது சிவசேனைக் கட்சி. இதன் மூலம் திமுகவிற்கு நாங்கள் பாடம் கற்பிப்போம்.
உண்மையான இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக தொண்டர்கள் திமுகவிற்கு எதிராகப் பிரச்சாரம்செய்ய வேண்டும்.
அதிமுக போட்டியிடாத இடங்களில் மதிமுகவிற்கு சிவசேனைக் கட்சி ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications