தமிழகம், புதுவையில் அத்வானி பிரச்சாரம்
கோவை:
தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தமிழகம் வருகிறார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அத்வானி தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும்பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மே 7ஆம் தேதி காலை மங்களூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் புதுவை வருகிறார். பாண்டிச்சேரியில் தனது பிரச்சாரத்தைத் துவக்குகிறார் அவர்.
பின் அங்கிருந்து மயிலாடுதுறைக்குச் சென்று பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். மே 8ஆம் தேதி அவர் ஹெலிகாப்டர் மூலம்கோவை வருகிறார்.
அங்கிருந்து திருப்பூர் செல்லும் அவர், பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார்.
இதேபோல, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். மே 6ஆம் தேதிஅவர் மதுரை, மானாமதுரை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications