தர்மபுரியில் ஜெ.நாளை தேர்தல் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
பர்கூர்:
தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை பிரச்சாரம் செய்கிறார் என்று அதிமுகஅமைப்புச் செயலாளர் தம்பிதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து பர்கூர் எம்.எல்.ஏ.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்த விவரமாவது:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
ஜெயலலிதா வேலூர், வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி வழியாக பர்கூர் தொகுதியில் 12 மணிக்கும், கிருஷ்ணகிரிதொகுதியில் 1 மணிக்கும், காவேரிப்பட்டினத்தில் 2 மணிக்கும், காரியமங்கலத்தில் 3 மணிக்கும் தர்மபுரியில் 4மணிக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்று தம்பிதுரை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications