9ஆம் தேதி அலிகள் கோவில் தேரோட்டம்
உளுந்தூர்பேட்டை:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு, அலிகள்நடத்தும் தேரோட்டத் திருவிழா மே 9ஆம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில்கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இக்கோவிலில் 18 நாட்கள் திருவிழாநடைபெறும்.
இந்தியா முழுவதிலுமிருந்து அலிகள் இங்கு வந்து கூடுவார்கள்.
கூத்தாண்டவர் முன்னிலையில் பூசாரிகள் அலிகளுக்குத் தாலி கட்டுவார்கள்.
இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருவிழா தொடங்கியது.
வரும் 9ஆம் தேதி இக்கோவில் தேரோட்டம் நடைபெறும்.
காலை 3.30 மணிக்கு கோவிலில் உள்ள அரவான் சிரசுக்குக் கண் திறந்து மாலைஅணிவிப்பார்கள்.
பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிரசுக்கு, கிலோ கணக்கில் குவியல்குவியலாகக் கற்பூரம் ஏற்றுவார்கள்.
பின் அதைச் சுற்றிச் சுற்றி வந்து கும்மியடித்துக் கொண்டே பாடுவார்கள்.
அப்போது 108 தேங்காய், 1008 எட்டு தேங்காய் என சூரைத் தேங்காய்உடைப்பார்கள்.
பிற்பகல் 1.30 மணிக்கு அழிகளம் எனப்படும் நத்தம் கிராமப்பந்தலுக்கு சிரசுசென்றடையும்.
அங்கு அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
உடனே அலிகள் தங்கள் தலையில் சூட்டியிருந்த பூவைப் பிய்த்து எரிவார்கள். நெற்றிப்பொட்டை அழிப்பார்கள்.
அலிகளின் கைகளிலுள்ள வளையல்களைப் பூசாரிகள் உடைத்து நொறுக்குவார்கள்.
அலிகளின் கழுத்திலுள்ள தாலிகளைப் பூசாரிகள் அறுப்பார்கள். தங்கத் தாலிகள்பூசாரியிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும், அலிகள் அழுது புலம்பிஒப்பாரி வைப்பார்கள்.
பிறகு கிணறுகளுக்குச் சென்று தலை முழுகுவார்கள். வெள்ளாடை அணிந்து, விதவைக்கோலத்திலேயே ஊருக்குப் புறப்படுவார்கள்.
மாலை 4 மணிக்கு பலிசாதம் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதை உறுமை சோறுஎன்பார்கள்.
இந்தச் சோற்றை வாங்கிச் சாப்பிட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக்குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.
எனவே இதை வாங்க மக்கள் முண்டியடித்து வந்து இதை வாங்குவார்களாம்.
இரவு 7 மணிக்கு ஏரிக்கரை காளிகோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நடைபெறும்.
பிறகு திரும்பவும் பந்தலடிக்கு தேர் கொண்டுவரப்படும்.
அரவான் சிரசு மட்டும் கூவாகம் கிராமத்தினுள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,பிறகு திருக்கோவிலில் கொண்டுபோய் வைக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications