திமுக வேட்பாளருக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஓட்டுக் கேட்டு வந்த தமிழக அமைச்சரைப் பார்க்க விரும்பாத மக்கள், விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டுவீட்டுக்குள்ளேயே இருந்து விட்டனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் சற்குண பாண்டியன் போட்டியிடுகிறார்.இவர் தண்டையார்பேட்டை துர்காதேவி நகரில் திறந்த ஆட்டோவில் ஓட்டுக் கேட்கச் சென்றார்.
இவரைப் பார்க்க விரும்பாத அப்பகுதியின் குறிப்பிட்ட ஒரு தெருவைச் சேர்ந்த மக்கள், வீட்டின் வெளியில் உள்ளவிளக்குகளை அணைத்துவிட்டு, தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து விட்டனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காதஅமைச்சர், உடனே வேகமாகக் கிளம்பி அடுத்த பகுதிக்குச் சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications