கருணாநிதி கீழ்ப்பாக்கத்தில் போட்டியிட வேண்டும்: இளங்கோவன் கிண்டல்
ஊட்டி:
கீழ்ப்பாக்கத்தில் போட்டியிட வேண்டியவர், சேப்பாக்கத்தில் போட்டியிடுகிறார் என கருணாநிதியைப் பற்றிகிண்டலாகக் குறிப்பிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
கோவை, நீலகிரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் மேற்கொண்ட பிரச்சாரப்பயணத்தின்போது பேசியதாவது:
சென்னையில் போட்டியிடும் தந்தையையும், மகனையும் தேர்தலில் மக்கள் தோற்கடிக்கத் தயராகி விட்டனர்.சென்னை தான் திமுக கோட்டை என்று இருந்த மாயை அகலப் போகிறது. அந்தக் கோட்டை இந்த முறைமக்கள் தகர்க்கப் போகின்றனர்.
திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதிலும் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். நீலகிரியில்தேயிலை விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
கரும்பு விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். திமுகவினர் கருணாநிதி ஆட்சியைப் பொற்கால ஆட்சி எனக் கூறிவருகின்றனர். எந்த ஆட்சி பொற்கால ஆட்சி? அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால், அங்கு மனநிலை சரியில்லாதவர்கள் இருப்பார்கள்.அவர்கள் , தன்னை அந்த ஊருக்கே ராஜாவாகக் காட்டிக் கொள்வார்கள். அப்படி நினைத்துக் கொள்வார்கள்.அதேபோல கருணாநிதியும் புலம்பி வருகிறார். கீழ்ப்பாக்கத்தில் நிற்க வேண்டியவர் சேப்பாக்கத்தில்போட்டியிடுகிறார்.
மதிமுகவை பொறுத்தவரை அந்தக் கட்சியை ஒரு கட்சியாகவே காங்கிரஸ் நினைக்கவில்லை. தமிழ் மாநிலகாங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணையவேண்டும் என விரும்புகிறோம். ஜெயலலிதா மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் அதிமுக அணியின்வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications