பாண்டி. திமுக வேட்பாளர் ஜீப் மீது குண்டு வீசி தாக்குதல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தி.மு.க.வேட்பாளரின் ஜீப் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாகஅவர் உயிர் தப்பினார்.
இந்த மாதம் 10ம் தேதி பாண்டிச்சேரி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிவேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு பாண்டிச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்இளங்கோவன் தான் வந்த பிரச்சார ஜீப்பை நிறுத்தி விட்டு வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று ஜீப்பின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டது.
இளங்கோவன் ஜீப்பில் இல்லாததால் உயிர் தப்பினார். இது தொடர்பாக இளங்கோவன் அரியாங்குப்பம் போலீசில்புகார் செய்தார். போலீசார் குண்டு வீசி தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு தொகுதியில் அதிக ஆதரவு இருப்பதால்கோபமடைந்துள்ள எதிர் கட்சி வேட்பாளர் நடத்திய தாக்குதல்தான் இது.
நான் ஜீப்பில் இருப்பேன், என்னை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் இது. நான்ஜீப்பில் இல்லாததால் உயிர் தப்பி விட்டேன். அவர்களுக்கு மக்கள் இந்த தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள்என்றார்.












Click it and Unblock the Notifications