மக்கள் பிரச்சனைகளும், தமிழகத் தேர்தலும்
சென்னை:
நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் பிரச்சினைகள் எதையும் முன்னிலைப்படுத்தாமல்,அரசியல் ரீதியாக ஒருவரையொருவர் தாக்குவதிலேயே அரசியல்வாதிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சனைகளுக்குப் பஞ்சமே இல்லை. பல தொகுதிகளில் மக்களுக்குத் தேவையானஅடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.
ஆனாலும் சில தொகுதிகளில் மட்டும் மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்கின்றனர்அரசியல்வாதிகள்.
அரைகுறையாகக் கட்டப்பட்ட கோமாளிப்பட்டி கிராபைட் தொழிற்சாலைதான் சிவகங்கைத் தொகுதியில்போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முக்கியமான தேர்தல் பிரச்சனையாகும்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டமுத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி மக்களுக்கு யானைதான்பெரும் பிரச்சனை. இங்கு கூட்டம் கூட்டமாக வரும் யானைக் கூட்டங்கள், வயல்களுக்குப் படையெடுத்துபயிர்களை எல்லாம் நாசம் செய்கின்றனவாம்.
அனைத்து வயல்களுக்கும் மின் வேலிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இம்மக்களின் முக்கியகோரிக்கையாகும்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களுக்கு சந்தனக் கடத்தல் வீரப்பன் பெரும்பிரச்சனையாகவே இருக்கிறான்.
இருந்தாலும், அதிரடிப்படை வீரர்களைக் கொண்டு வீரப்பனைப் பிடிப்பதை விட தங்கள் தொகுதியில் மேலும் பலபள்ளிகளும், டெலிபோன் பூத்துகளும் அமைத்துத் தந்தாலே போதும் என்று அந்தியூர் தொகுதி மக்கள்கூறுகின்றனர்.
நிலத்தடி நீர் ஏற்படுத்தித் தராதது, பஸ் ஸ்டாண்டுகள் அமைக்காதது, சமையல் கேஸ் இணைப்புப் பெற்றுத் தராதது -இவை லால்குடி, ஈனக்கோரி மற்றும் வாலாட்டி கிராம மக்களின் முக்கியமான குறைபாடுகள்.
கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் ஆகியவற்றில் உள்ளதொகுதிகளிலும், சென்னை ராயபுரம் தொகுதியிலும் உள்ள மீனவர்களும் தங்களுக்கு இருக்கும் ஏகப்பட்டபிரச்சினைகளுக்குத் தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர்.
தேர்தலில் நிற்கும் மருத்துவர்களுக்கு மட்டுமே ஓட்டுப் போட வேண்டும் என்று அனைத்து மருத்துவர்களையும்மருத்துவர்கள் சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் மொத்தம் 10 மருத்துவர்கள் களத்தில் உள்ளனர்.
இது போன்றே அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை ஒரு கையிலும் வேட்பாளர்கள்தரும் வாக்குச் சீட்டுகளை மறு கையிலும் வைத்துக் கொண்டு வாக்குச் சாவடிக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications