முதல்வர் பதவிமேல் ஆசை இல்லை: மூப்பனார்
திருச்சி:
முதல்வராகும் ஆசை தனக்கு இல்லை என்று தமாகா தலைவர் மூப்பனார் கூறினார்.
தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் வழியில், திருச்சியில்ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இதுபோன்ற குழப்பமான அரசியல்சூழ்நிலை எப்போதும் இருந்ததில்லை. எங்கள் லட்சியம் காமராஜர் ஆட்சிதான். அதிலிருந்து மாற மாட்டோம்.
காமராஜருக்குக் கருணாநிதி எவ்வளவு விரோதமாக இருந்தார் என்று எனக்கத் தெரியும். ஆனால் சிதம்பரத்துக்குஎன்ன தெரியும்? காமராஜர் பற்றி சிதம்பரம் எனக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை.
சோனியா காந்தி பிரச்சாரத்துக்கு வராததால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. தமாகாவும் காங்கிரஸும்இணையுமா என்று கேட்டீர்கள். நாங்கள் இணைந்துதானே வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
ஜெயலலிதாவை ஜனநாயக முறையில் எதிர்க்க முடியாமல், சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி தேர்தலில் நிற்கவிடாமல் செய்து விட்டனர்.
அவர் தேர்தலில் நிற்க முடியாவிட்டாலும் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஜெயலலிதா முதல்வராகமுடியும். அவர் முதல்வராவதில் சிக்கல் ஏற்பட்டால், ஜனநாயக முறையில் அது தீர்த்து வைக்கப்படும் என்றார்மூப்பனார்.












Click it and Unblock the Notifications