திமுகவே மீண்டும் வெல்லும் .. சன் டிவி கருத்துக் கணிப்பு
சென்னை:
சன் டிவி நிறுவனம் தமிழகத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கிடையேகுறைந்த அளவிலான வித்தியாசத்திலேயே வாக்கு விகிதம் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், திமுககூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.
சன் டிவி நிறுவனமும், தி ஆப்ட் ரிசர்ச் நிறுவனமும் இணைந்து 4-ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பைநடத்தின. மொத்தம் 25 தொகுதிகளில் 6200 வாக்காளர்களிடம் மாதிரி கேள்வித்தாள் கொடுத்து, அதற்குரியபதில்கள் பெறப்பட்டன. இந்தக் கருத்துக் கணிப்பு ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நான்கு தொகுதிகளில்நிராகரிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்டது.
கருத்துக் கணிப்பின் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவி தனது சிறப்பு நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது.அதன் முடிவுகள் விவரம் வருமாறு:
இந்தக் கேள்விக்கு திமுக ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்று 54.84 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதிமுகஆட்சிக்கு ஆதரவாக 29.31 சதவீதம் பேரும், இரண்டு ஆட்சிகளும் இல்லை என்று 6.31 சதவீதம் பேரும்வாக்களித்துள்ளனர். 9.54 பேர் கருத்து சொல்ல மறுத்து விட்டனர்.
இந்தக் கேள்விக்கு தற்போதைய முதல்வர் கருணாநிதிதான் அதிக வாக்குகளைப் பெற்றார். அவருக்கு ஆதரவாக50.18 சதவீதம் பேர் வாக்களித்தனர். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 35.17 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.மற்றவர்கள் என்று கருத்துச் சொன்னவர்கள் 6.73 சதவீதம் பேர். 7.92 சதவீதம் பேர் கருத்து ஏதும் சொல்லவிரும்பவில்லை.
இந்தக் கேள்விக்கும் திமுக கூட்டணியே அதிக வாக்குகளைப் பெற்றது. திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்என 47.20 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்குத்தான் எங்கள் ஓட்டு என்று 44.04 சதவீதம் பேரும்,மதிமுகவுக்கு வாக்களிப்போம் என 3.91 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு வாக்களிப்போம் என 2.46 சதவீதம்பேரும் என தெரிவித்தனர். கருத்து சொல்ல விரும்பாதவர்களின் சதவீதம் 2.39 ஆகும்.
இந்த விகிதத்தின் படி பார்த்தால், திமுக கூட்டணிக்கு 123 முதல் 130 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு102 தொகுதிகள் முதல் 109 தொகுதிகள் வரையும் கிடைக்கலாம். மதிமுகவுக்கு 2 தொகுதிகள் கிடைக்கலாம்என்று சன் டிவி கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications