சன் டிவி விளம்பரத்தை தடை செய்ய கோரி அ.தி.மு.க. புகார்
சென்னை:
சன் டிவியில், மறக்கலாமா? என்ற பெயரில் வரும் விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனஅ.தி.மு.க.கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.பி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்கொடுத்துள்ளார்.
இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளன.அனைத்து கட்சி தலைவர்களும் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.கவும், அ.தி.மு.கவும் தங்கள் டிவிகளில் ஒருவரை ஒருவர் தாக்கி விளம்பரங்கள் வெளியிட்டு வருகின்றனர்.
சன் டிவியில் ஜெயலலிதா ஆட்சியின் போது ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சந்திரலேகா மீது நடத்தப்பட்ட ஆசிட் வீச்சு,தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் 3 வேளாண் கல்லூரி மாணவிகள் உயிருடன் எரிக்கப்பட்டது, ஜெயலலிதாவின்வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது ஜெயலலிதாவும், சசிகலாவும் அணிந்திருந்த நகைகள்போன்றவற்றை காட்டி மறக்கலாமா? என்ற பெயரில் அ.தி.மு.கவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இந்த விளம்பரம் அ.தி.மு.கவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இது தேர்தல் விதிமுறைகளுக்குஎதிராகவும் இருக்கிறது. எனவே இந்த விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளர் ஓ.எஸ். மணியன் தமிழக தேர்தல் அதிகாரி சாரங்கியிடம் புகார் கொடுத்துள்ளார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் மணியன் கூறுகையில், வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் மதசார்பற்றகூட்டணி மாபெரும் வெற்றி பெரும். தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தி.மு.கவினர் சன் டிவியில்ஜெயலலிதாவைப் பற்றி தவறான விளம்பரம் செய்து வருகிறார்கள்.
இந்த விளம்பரங்கள் மக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும். இது போன்று விளம்பரம் செய்வது தேர்தல்விதிமுறைகளுக்கு எதிரானது.
சன் டிவியில் ஒளிபரப்பப்படும் விளம்பரம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்தவிளம்பரங்கள் சட்டத்திற்கு புறம்பானது. இது போன்று விளம்பரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகும்.
தேர்தல் விதிமுறையை மீறி விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் புகார்செய்துள்ளோம் என்றார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications