அதிமுக அமோக வெற்றி பெறும்: ஜெ. தீவிர நம்பிக்கை
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஸ்டார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கருணாநிதி செய்த ஊழல், திமுக ஆட்சியில் நடந்த சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, நிர்வாகத்திறமையின்மைஆகியவற்றைப் பிரதானமாக வைத்தே இந்த முறை அதிமுக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும்.
பல மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது மக்கள் என்னிடம் காட்டும் அன்பைப் பார்த்து நான்மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம்.
பொதுமக்கள் என்னிடம் காட்டும் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.அவர்கள் பாராட்டுமளவுக்கு நல்லாட்சி கொடுப்பதே என் விருப்பம்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்று பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வேன் என்று ஆணித்தரமாகக்கூறுகிறேன்.
நான் தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைக்கவில்லையே என்று எனக்கு சிறிது கூட வருத்தம் கிடையாது.ஏற்கனவே நான் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது234 தொகுதிகளிலும் நான் போட்டியிடுகிறேன்.
அதிமுகவுக்காக அனுதாப அலை வீசுகிறதா என்பது பற்றி நான் எதுவும் கருத்துக் கூற முடியாது. தேர்தல் முடிந்துமுடிவுகள் வெளிவந்த பிறகுதான் நான் எதுவும் கூற முடியும்.
கருத்துக்கணிப்புக்கள் அதிமுகவுக்குச் சாதகமாகவே உள்ளன. கண்டிப்பாக அதிமுக அமோக வெற்றி பெறும்.அதிமுகவில் உள்ளவர்கள் என்னைத் தவிர யாரையும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அதிமுகவெற்றி பெற்றால் நான் கண்டிப்பாக தமிழக முதலமைச்சராக ஆவேன் என்று தனது பேட்டியில் கூறியிருந்தார்ஜெயலலிதா.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications