தலித் மக்களின் ஓட்டு யாருக்கு?
ஓட்டப்பிடாரம்:
ஜாதியை அடிப்படையாக கொண்ட அரசியலும், தலித் இனத்தவரின் வாக்குகளும் வரவிருக்கும் தேர்தலில்முக்கியப்பங்கு வகிக்கிறது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசுவாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தலித் மக்கள் தொகை 23 சதவிகிதம் உள்ளது. குறிப்பாக தென்தமிழ் நாட்டில் தலித் வாக்ககுள்தான்வேட்பாளர்களின் வெற்றியை நிச்சயம் செய்கின்றன.
தி.மு.க. அணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது தலித் வாக்குகளைபெறுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.கவுக்கு ஆதரவாக தேவர் இனத்தவரின் வாக்குகள் இருக்கின்றன. அதற்கு இணையான உள்ளவை தலித்வாக்குகள். அந்த வாக்குகள் அ.தி.மு.கவுக்கு சென்று விடக்கூடாது என்ற கணக்கில்தான் புதிய தமிழகம் கட்சிக்கு 10தொகுதிகள் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் கிருஷ்ணசுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், திராவிடகட்சிகள், குறிப்பாக தி.மு.க. தலித்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளது. அவர்களின் தேவையையும்புரிந்து கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இப்போது தலித்களை ஆதரிக்கிறார்கள் என்றார்.
தி.மு.க.தலைவர் விடுதலை விரும்பி கூறுகையில், நாங்கள் என்றும் வாக்களர்களைத்தான் நம்பி இருக்கிறோம்.தொடர்ந்து ஊழலை எதிர்த்து பாடுபடுவோம் என்றார்.
தி.மு.க.தனது கூட்டணியில் தலித் கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. இது தலித்களுக்குகொடுக்கப்படடும் முக்கியத்துவத்தை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.
தலித்கள் அதிகம் வாழும் கிராமங்களில் தலித் வேட்பாளர்கள் மட்டுமே பிரச்சாரம் செய்யஅனுமதிக்கப்படுகிறார்கள்.
புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் அது தமிழகத்தில் நிலவி வரும் ஜாதி அரசியலில்புதிய பரிணாமத்தை கொண்டு வரும்.
முன்னர் புதிய தமிழகம் கட்சியையும் , விடுதலை சிறுத்தை அமைப்பையும் வன்முறையை தூண்டும் ஜாதிக்கட்சிகள்என கூறி வந்த கருணாநிதி இப்போது அந்த கட்சி தலைவர்களின் ஆதரவையும், பிரச்சாரத்தையும் எதிர்ப்பார்க்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications