தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்களுக்கு விடுமுறை
சென்னை:
தேர்தல் நாளன்று தினக்கூலி பெறும் தொழிலாளர்கள், கடைகளில் பணிபுரிபவர்கள், வர்த்தக நிறுவனங்களில்பணிபுரிவோர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்துறைஅறிவித்துள்ளது.
இது பற்றி தொழிலாளர் துறை செயலாளர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலும், திருச்சி நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தலும்நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில்சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சம்பளம் பிடிக்கக்கூடாது என உத்தரவிவிடப்பட்டுள்ளது. தற்காலிக பணியில் இருப்பவர் மற்றும்தினக்கூலி பெற்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு ரூ 500 வரை அபராதம் விதிப்பதற்கு சட்டப்பிரிவில் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று ஷிப்டில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்என இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனாலும் எல்லா தொழிலாளர்களும் வாக்களிக்கவேண்டும் என்பதற்காக வாக்குபதிவு முடிவடைவதற்கும் அடுத்து ஷிப்ட் தொடங்குவதற்கும் இடையில் போதியநேரம் இருக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த விதிமுறையை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்த பகுதியில் உள்ள தேர்தல்அதிகாரியிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலரிடமோ புகார் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications