பாண்டியில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது
பாண்டிச்சேரி:
பரபரப்பும், சுறுசுறுப்பும் இல்லாத பாண்டிச்சேரி சட்டசபை தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை 4மணியுடன் முடிவடைந்தது.
பாண்டிச்சேரி சட்டசபை தேர்தல் இந்தமாதம் 10ம் தேதி, வியாழக்கிழமை நடக்கிறது. இதற்கான பிரச்சாரம்செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைகிறது.
பாண்டிச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் இருக்கின்றன. 30 தொகுதிகளுக்கு 193 பேர் போட்டியிடுகிறார்கள்.இவர்களில் 76 பேர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். பாண்டிச்சேரியிலிருக்கும் 6,58,000 வாக்காளர்கள்போட்டியிடும் 193 பேரிலிருந்து 30 பேரை தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள்.
முந்தைய தேர்தலைப் போல் இல்லை இந்த முறை தேர்தல். போஸ்டர்கள், கட்-அவுட்டுகள் போன்ற எதுவும்காணப்படவில்லை. வேட்பாளர்கள் வீடுவீடாக போய் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கு கொண்ட பிரச்சாரக் கூட்டத்தைத் தவிர பொதுக்கூட்டங்கள் கூடபெருமளவில் நடக்கவில்லை.
மும்முனைப்போட்டி:
பாண்டிச்சேரியில் மும்முனை போட்டி நடைபெறுகிறது. அ.தி.மு.க.-பா.ம.க. ஓர் அணியிலும், த.மா.கா, காங்கிரஸ்,இடது சாரிகள் மற்றொரு அணயிலும், தி.மு.க.கூட்டணி மற்றொரு அணியிலும் போட்டியிடுகின்றன. இந்த மூன்றுஅணியைத்தவிர ம.தி.மு.கவும் தேர்தல் களத்தில் இருக்கிறது. ஆனாலும் ம.தி.மு..க. 30 தொகுதிகளில் 11தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது.
தற்போதைய பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரான நாராயணசுவாமி,புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தலைவரும். தற்போதைய எம்.எல்.ஏவுமான கண்ணன் ஆகியோர் இந்த முறைதேர்தலில் போட்டியிடவில்லை.
பாண்டிச்சேரியில் போட்டியிடும் முக்கியாமான தலைவர்கள்:
முன்னாள் முதல்வர் டி.ராமச்சந்திரன் (அ.தி.மு.க.) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.ராஜாராமனையும், புதுச்சேர் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிவாசனையும் எதிர்த்து மண்ணடிப்பேட்டைதொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் (தி.மு.க.) அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் நன்னனை எதிர்த்தும், இந்தியதேசிய காங்கிரஸ் வேட்பாளர் புவியரசுவை எதிர்த்தும் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் வி.வைத்தியலிங்கம் (இந்திய தேசிய காங்கிரஸ்) தனது சகோதரரும், புதுச்சேரி மக்கள்காங்கிரஸ் வேட்பாளருமான முத்துநாராயணனையும், பா.ம.க. வேட்பாளரான தனராஜையும் எதிர்த்துநெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
காரைக்கால் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ராமசுவாமிதி.மு.க. வேட்பாளர் நஜீமையும்,அ.தி.மு.க. வேட்பாளர் அசானா மரைக்காயரையும் எதிர்த்து போட்டியிடுகிறார்.
முன்னாள் சபாநாயகர், பழனிராஜா (இந்திய தேசிய காங்கிரஸ்), எம்.சந்திரகாசு (இந்திய தேசிய காங்கிரஸ்),தறபோதைய சபாநயாகர் சுப்ரமணியன் (இந்திய தேசிய காங்கிரஸ்), காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள்ரங்கசுவாமி, வல்சராஜ். த.மா.காவைச் சேர்ந்த அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார் மற்றம் எம். கந்தசுவாமியும்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
14 இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தவிர்த்துப் பார்த்தால் தேர்தல் பிரச்சாரம் சுமுகமாக நடந்துமுடிந்தது. இந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் காயமடைந்தனர்.
தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்காக விரவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications